Wednesday, August 20, 2008



















காவின் நிகழ்வின் நிகழ்வின் பின்னர் குர்ஆனிலிருந்து சில பகுதிகள் சபையோரால் கூட்டாக ஓதப்பட்டு பின்னர் துஆ பிரார்த்தனை இடம் பெறும். இதனைத் தொடர்ந்து மணமகன் சபையோரிற்கு சலாம் கொடுப்பார்.

இங்கும் அஜ்மீர் சலாம் கொடுப்பதினைக் காணலாம்.





முஸ்லிம் திருமண நிகழ்வில் காவீன் மிக முக்கியமாகும். மணமக்கள் தங்களின் இணைவினை இருவரும் ஏற்றுக் கொள்வதையும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதினையும் மஹரின் தொகையையும் இங்கு பகிரங்கப்படுத்துவர். இங்கு அல்லாஹ்வினை முன்னிறுத்தி இவர்களின் திருமணம் 02 சாட்சிகள் மற்றும் சபையோர் முன்னிலையில் பதிவு செய்யப்படும்.

காவின் கலரியில் மணமகனும் அவரிற்கு இருமருங்கிலும் தோழர்கள், சகோதரர்கள் அமர்ந்திருப்பது வழமையாகும்.





காவின் நிகழ்வுக்கு மணமகனின் தோழர்களால் அஜ்மீர் தயார்படுத்தப்பட்ட பின்..

மணமகனை ஆராத்தியெடுக்கும் மச்சிமார் கூட்டம் II






பெண்கள் கூட்டத்தின் நடுவே திருமண நாளன்று அகப்பட்டு மணமகன் அனுபவிக்கும் அன்புத் தொல்லைகளின் அளவினை இவையென்று குறிப்பிட்டு விடமுடியாது. அதன் கடிவாளம் மச்சிமாரையும் அவர்களின் கிண்டல்களையும் பொறுத்து வேறுபடக்கூடியது என்பர் அனுபவம் பெற்ற மணமக்கள்.

மணமகனை ஆராத்தியெடுக்கும் மச்சிமார் கூட்டம் I






இந்த திருமண பண்பாட்டு முறை முஸ்லிம்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்க்கொண்டிருந்தாலும் கிழக்கு முஸ்லிம்களிடத்தே ஓரளவு புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மணமகனின் கையில் மருதாணி போடும் போது பல்வேறு கோலங்களை ஒன்று சேர்த்து முஸ்லிம் பெண்கள் இடுவது மிக அழகாக இருக்கும்.