Monday, November 17, 2008

12, 10 வருடங்களின் பின் சந்தித்துக் கொண்டோம்

பொன்விழாக் காணும் அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் 1996 O/L, 1999 A/L காலப்பகுதியில் ஒன்றாய்க் கற்று மீண்டும் நாங்கள் 12, 10 வருடங்களின் பின் 16.11.2008ல் சந்தித்துக்கொண்டோம்.

பிரியும் போது தனிமனிதனாகப் பிரிந்த எங்களில் பலர் குடும்பத் தலைவர்களாகவும் தலைவிகளாகவும் இன்று உயர்வு பெற்றிருந்ததும் அவர்களின் குழந்தைகளின் குறும்புகளும் எங்களின் வயது முதிர்ச்சியை கூறிவிட்டது.

எங்களின் ஆசிரியர்களும் அதிபர்களும் இன்றும் நண்பர்ளாய் இருந்து கொண்டேயிருப்பது மிக்க மகிழ்ச்சியை அளவில்லாது தந்ததுடன் பசுமையான நினைவுகளினை மீட்டிக் கொண்டதில் திருப்திகள் அதிகம்.

புவியியல் எல்லையில் தூரமாகியிருந்தாலும் தொலைபேசியினூடாய் தொடர்பு கொண்ட அன்பர்களின் குரல்கள் பழைய நினைவுகளை மீளவும் அசைபோட வாய்ப்பளித்தது ஒரு சுவைதானே..

அந்த மகிழ்ச்சிகரமான நிகழ்விலிருந்து சில நிழல்கள் சர்வதேசத்தில் சிதறி வாழும் எங்களின் தோழர்களிற்காக












Wednesday, August 20, 2008



















காவின் நிகழ்வின் நிகழ்வின் பின்னர் குர்ஆனிலிருந்து சில பகுதிகள் சபையோரால் கூட்டாக ஓதப்பட்டு பின்னர் துஆ பிரார்த்தனை இடம் பெறும். இதனைத் தொடர்ந்து மணமகன் சபையோரிற்கு சலாம் கொடுப்பார்.

இங்கும் அஜ்மீர் சலாம் கொடுப்பதினைக் காணலாம்.





முஸ்லிம் திருமண நிகழ்வில் காவீன் மிக முக்கியமாகும். மணமக்கள் தங்களின் இணைவினை இருவரும் ஏற்றுக் கொள்வதையும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதினையும் மஹரின் தொகையையும் இங்கு பகிரங்கப்படுத்துவர். இங்கு அல்லாஹ்வினை முன்னிறுத்தி இவர்களின் திருமணம் 02 சாட்சிகள் மற்றும் சபையோர் முன்னிலையில் பதிவு செய்யப்படும்.

காவின் கலரியில் மணமகனும் அவரிற்கு இருமருங்கிலும் தோழர்கள், சகோதரர்கள் அமர்ந்திருப்பது வழமையாகும்.





காவின் நிகழ்வுக்கு மணமகனின் தோழர்களால் அஜ்மீர் தயார்படுத்தப்பட்ட பின்..

மணமகனை ஆராத்தியெடுக்கும் மச்சிமார் கூட்டம் II






பெண்கள் கூட்டத்தின் நடுவே திருமண நாளன்று அகப்பட்டு மணமகன் அனுபவிக்கும் அன்புத் தொல்லைகளின் அளவினை இவையென்று குறிப்பிட்டு விடமுடியாது. அதன் கடிவாளம் மச்சிமாரையும் அவர்களின் கிண்டல்களையும் பொறுத்து வேறுபடக்கூடியது என்பர் அனுபவம் பெற்ற மணமக்கள்.